தேசிய அறிவியல் தினம் : மாணவர்களுக்கு போட்டி

விழுப்புரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இ.எஸ்., கல்விக்குழுமம் கல்வியியல் கல்லுாரி இணைந்து வரும் 28ம் தேதி தேசிய அறிவியல் தின போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலமுருகன் செய்திக்குறிப்பு:

தேசிய அறிவியல் தினம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தையொட்டி, அறிவியல் ஆர்வலர்கள் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடக்கிறது.

'ஆதலால் அறிவியல் பழகுவோம்', 'அறிவியல் என்னும் ஒரு ஆயுதம்', 'அறிவியல் சிந்தனையே சமூக மாற்றம்' தலைப்புகளில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்த கட்டுரை 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வரும் 26ம் தேதிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசிய அறிவியல் தின போட்டிகள் 2026, ஹாஜி மன்சூர்ஷா உயர்நிலை பள்ளி, பாகர்ஷா வீதி, விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு நேரடியாகவும், தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

மேலும், தேசிய அறிவியல் தின போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மொபைல் 9750817500 எண்ணில் அனுப்பி வைக்கலாம்.

வரும் 28ம் தேதி விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் கருத்தரங்கமும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழும், சிறப்பிடம் பிடிக்கும் 10 கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement