இலங்கை அதிபரை சந்தித்ததில் மகிழ்ச்சி; இருநாட்டு உறவில் முன்னேற்றம் குறித்து பேசினோம்: பிரதமர் மோடி தகவல்

1

புதுடில்லி: ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: மதிப்புமிக்க ஓர் அயலவருடனான நட்புறவை வலுவாக்கல். டில்லியில் அதிபர் அநுர குமார திசாநாயக்கை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.


அண்மை காலங்களில் இந்திய இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நாம் மதிப்பாய்வு செய்தோம்.


அத்துடன், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, கலாசாரம், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement