பட்டா பெயர் மாறுதலில் லட்சங்களை அள்ளும் அதிகாரி!

இ ஞ்சி டீயை உறிஞ்சிய படியே, ''கடைசி நேர அழைப்பை தவிர்த்துட்டாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், சமீபத்துல அ.தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரே... தி.மு.க.,வில், மு.க. அழகிரியின் தீவிர ஆதர வாளரா இருந்தவரை, 2014ல் அழகிரியுடன் சேர்த்து கட்சியில இருந்து நீக்கிட்டாங்க...

''அண்ணன் அழகிரி யுடன், முதல்வர் ஸ்டாலின் சமாதானம் ஆகிட்டாலும், அவரையும், அவரது ஆதரவாளர்களையும் மறுபடியும் கட்சியில மட்டும் சேர்த்துக்கல... மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தலைமைக்கு மன்னிப்பு கடிதம் குடுத்தும், அவங்களை சேர்க்காம இழுத்தடிச்சாங்க...

''இதனால, வெறுத்து போன மன்னன், சென்னையில், பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்துட்டாரு... இந்த இணைப்பை தடுக்க, கடைசி நேர முயற்சியில், தி.மு.க.,வினர் இறங்கினாங்க...

''அதாவது, பழனிசாமியை சந்திக்க மன்னன் கார்ல போயிட்டு இருந்தப்ப, அவரது மொபைல் போனுக்கு, தி.மு.க., தலைமை கழக நிர்வாகியான, 'அன்பகம்' கலையின் கால் வந்திருக்கு... அதை பார்த்த மன்னன், எடுத்து பேசாம, நேரா பழனிசாமியை பார்த்து அ.தி.மு.க.,வுல சேர்ந் துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''இப்படி கட்சி நடத்தினா, ஆட்சியை பிடிச்ச மாதிரிதான் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''நடிகர் விஜயின், த.வெ.க., கட்சிக்கு தேர்தல் கமிஷன் விசில் சின்னம் ஒதுக்கியிருக்கோல் லியோ... ஜன., 22ல் இந்த தகவலை மீடியாக்கள் வெளியிட்ட பிறகு தான், த.வெ.க.,வினர் தங்களது இ - மெயிலை திறந்து, தேர்தல் கமிஷன் கடிதத்தை பார்த்திருக்கா ஓய்...

''அதே மாதிரி, புதுச்சேரியிலும் அந்த கட்சிக்கு பிப்., 12ம் தேதியே விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கிடுத்து... ஆனா, இது 16ம் தேதிதான் அந்த கட்சியினருக்கு தெரிஞ்சிருக்கு... 'கட்சியின் அதிகாரப்பூர்வ, இ - மெயிலை தினமும் பார்க்கவே மாட்டாளா'ன்னு அந்த கட்சி தொண்டர்கள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''லட்சக்கணக்குல சம்பாதிச்சிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.

''பட்டுக்கு பிரசித்தி பெற்ற ஊரின் தாலுகா அலுவலக துணை அதிகாரி ஒருத்தர், பட்டா பெயர் மாற்றத்துல பக்காவா வசூல் வேட்டை நடத்துறாரு... பட்டா பெயர் மாற்றத்துல மட்டும், கடந்த ஆறே மாசத்துல பல லட்சங்களை அள்ளிட்டாரு பா...

''அதுலயும், சட்ட சிக்கல்கள் அதிகமா இருக்கிற பட்டா விண்ணப்பங்களை கேட்டு வாங்கி, சதுர அடிக்கு இவ்வளவுன்னு ரேட் நிர்ணயம் பண்ணி, 'கட்டிங்' கேட்கிறாரு... அதோட, நகர்ப்புறத்துல இருக்கிற சொத்துக்களுக்கு பட்டாக்கள் தந்தா, நிறைய கட்டிங் கிடைக்கும் என்பதால, நகர்ப்புறங்கள்ல இருந்து வர்ற விண்ணப்பங்களை ஆர்வமா கவனிக்கிறாரு பா...

''இதுக்கு புரோக்கர்களை வச்சா, அவங்களுக்கும் பங்கு தரணும்கிறதால, இவரே கைநீட்டி பணத்தை வாங்கிடு றாரு... இவரை மாதிரியே, அஞ்சு துணை அதிகாரிகள் இந்த அலுவலகத்துல இருந்தாலும், இவரது வசூல் கொடிதான் உயர பறக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''கமலக்கண்ணன் சார் நல்லாயிருக்கேளா... ரொம்ப நாளா பார்க்கவே முடியலையே...'' என, பெஞ்சுக்கு வந்த நண்பரிடம், குப்பண்ணா கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.

Advertisement