முக்கிய துறைகள் ஜன., வளர்ச்சி 4சதவீதம் ஆக வீழ்ச்சி

புதுடில்லி: நாட்டின் முக்கியமான எட்டு கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, ஜன., மாதத்தில் 4 சதவீதமாக குறைந்ததாக மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் அது 5.10 சதவீதமாக இருந்தது.

சென்ற டிசம்பரில் 4.70 சதவீதமாக காணப்பட்டது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி, ஜனவரியில் எதிர்மறை வளர்ச்சி கண்டது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட், மின்சாரம் ஆகியவை எட்டு முக்கிய கட்டமைப்பு துறைகளாக உள்ளன.

Advertisement