தமிழகம் வரும் வட மாநிலத்தவர் கையில் 2 கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர்: திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
சென்னை: வட மாநிலத்தவர், தமிழகம் வரும்போது, கையில் இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
'தமிழகம் தலைகுனியாது' என்ற தலைப்பில், சென்னை நங்கநல்லுாரில், திமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு தினந்தோறும் 10,000த்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்கள், தமிழகம் வரும்போது, கையில் தலா இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது போல் கஞ்சா பழக்கம் வந்திருக்காது.
தற்போது, திமுக அரசு போதைப்பொருளை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கஞ்சாவிற்கு தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் கஞ்சாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:
இரு மொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான், வெளிநாடுகளில் உள்ள பல உயர் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். ஆனால், ஹிந்தி படித்த பெரும்பாலானோர் கஞ்சாவும், பானிப்பூரியும் விற்கின்றனர்.
மத்திய பாஜ, அரசு, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வஞ்சனை செய்துள்ளது. அவர்கள், வயிற்றில் ஈர துணியை போட்டு அனுப்பினர். வரும் தேர்தலில், நாம் அவர்கள் தலையில் முக்காடு போட்டு அனுப்ப வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தகுதியே இல்லை. அவர் ஆட்சியில் தான், துாத்துக்குடி துப்பாக்கி சூடு, கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் என அரங்கேறின.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (25)
Sivagiri - chennai,இந்தியா
20 பிப்,2026 - 22:44 Report Abuse
0
0
Reply
Ram - ottawa,இந்தியா
20 பிப்,2026 - 22:25 Report Abuse
இந்த மந்திரியை அடி 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
20 பிப்,2026 - 22:16 Report Abuse
இவருக்கு எப்படி வருகிறது தெரிஞ்சிருக்குது. இவரு கையில தான் முதலில் கொடுக்கஅங்க போலிருக்கு. 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
20 பிப்,2026 - 22:14 Report Abuse
தேர்தல் வருவதால் திமுகவினர் அனைவருக்கும் மனநிலை குழம்பி காணப்படுகின்றனர். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
20 பிப்,2026 - 22:06 Report Abuse
அமைச்சரக்கும் முழுதும் தெரியாமல் பேசக்கூடாது வட மாநிலத்தவர்கள் இங்கே வரும்போது இரன்டு
என்ன, பத்து கிலோகூட கஞ்சா எடுத்து வருவார்கள் ஏனென்றால் இங்கேதான் கஞ்சா வாங்க அரசியல் பிரமுகர் தயாராக உள்ளனரே. இது அவர்கள் தொழில் அதை ஆதரிப்பது இவருடைய மாநில காட்சி போதுமா அமைச்சரே முதலில் உங்களது கட்சி பிரமுகர்களை கட்டுப்படுத்துங்கள் அவர்கள்மீது தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள் பிறகு பேசுங்கள் வடமானித்தர்களைப்பற்றி 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
20 பிப்,2026 - 21:55 Report Abuse
வட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கையில் ரெண்டு கிலோ கஞ்சா கொண்டுவருகிறார்களாம் ...ஹிந்தி படித்தவர்கள் கஞ்சாவும் பனி பூரியும் விற்கிறார்கள் என்று விடியல் மந்திரி ....அப்ப எதுக்கு விடியல் கஞ்சா விற்கும் பிஹாருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகனும் ??.....எதுக்கு விடியல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் வடக்கன் இத்தாலிக்காரன் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி?? ....வடக்கன் கூட்டணியில் இருந்து விடியல் வெளியேறட்டும் .... 0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
20 பிப்,2026 - 21:51 Report Abuse
இவரெல்லாம் ஒரு அமைச்சர் . 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
20 பிப்,2026 - 21:51 Report Abuse
அயலக அணி வைத்து தொழில் செய்யும் ஒரே கட்சி எது என்று பொது மக்களுக்கே தெரியும். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
20 பிப்,2026 - 21:40 Report Abuse
உண்மையில் ரயிலில் வரும் வட மாநிலத்தவர் பெரும்பலும் கஞ்சாவுடன் தான் வருகின்றனர்! 0
0
Reply
ஆரூர் ரங் - ,
20 பிப்,2026 - 21:39 Report Abuse
அயலக அணியை மற்ற எவராலும் விஞ்ச இயலாது. 0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement