போராடுவோர் மீது போலீசார் நடவடிக்கை; அரசும் முதல்வரும் மவுனமாக இருப்பதா? மா. கம்யூ., சண்முகம் கேள்வி
கோவை: போராடுவோர் மீது போலீசார் வாயிலாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த மா.கம்யூ., கூட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வோடு உடன்பட முடியாத பல்வேறு விஷயங்கள் எங்களுக்கு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்தக்கோரி, போராடியவர்கள் மீது போலீசாரின் நடவடிக்கையை, நாங்கள் கடுகளவும் ஏற்கவில்லை. இதற்கு காரணமான, காவல்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராடுபவர்கள் மீது, தற்போது சென்னை போலீசார், புதுவித நடவடிக்கை மேற்கொள்கின்றர். கைது செய்து, மண்டபத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லாமல், வேனில் அமர வைத்து, நாள் முழுவதும் சென்னையை சுற்றி வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க, உணவு உண்ண, தண்ணீர் குடிக்க அனுமதிக்காமல், மாலை, 6:00 மணிக்கு ஏதாவது ஒரு இடத்தில் இறக்கி விட்டு விடுகின்றனர்.
இதை கண்டிக்க வேண்டிய தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் மவுனமாக இருப்பது சரியா? போராடும் உரிமையை, அரசியல் சாசனம் அளித்திருக்கிறது. போராடுபவர்கள், கண்ணியமாக நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறி, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டால் மா. கம்யூ., கண்டன குரல் எழுப்பும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையம் மீறி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டால் எங்களின் கண்டன குரல் தொடரும். அதோட எங்க வேல முடிஞ்சு போச்சு. ஏன்ன நாளைக்கு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் கண்டன குரல் கூட எழுப்பவில்லை என்று சொல்லக்கூடாது பாருங்கள். இதுக்கு மேல கண்டனம் போராட்டம் என்று தெரிவித்தால் பெட்டி போயிடும்.
அங்குட்டு ஒரு குத்து இங்கிட்டு ஒரு குத்து இரட்டை வட இலஞ்ச உண்டியல்கள்
தீந்துடுச்சு
தூக்கத்தில் இருந்து விழித்து சொல்லிவிட்டு மீண்டும் தூங்க சென்றார்
சில கோடிகளுக்கு கட்சியை அடமானம் வைத்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்று கதறினாலும் ஒரு பயனும் இல்லை.
எப்போவும் போல தூங்குங்கள்.. நாம வாங்குற சீட்டுக்கும், நோட்டுக்கும் வீர வசனம் எல்லாம் பேசக்கூடாது..
மானம் கெட்ட கம்மிகள்.....