அமெரிக்காவில் அடுத்தடுத்து அவமானப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்
வாஷிங்டன்: செல்லும் இடங்களில் எல்லாம் பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
காசா அமைதி வாரியம் குறித்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்தது. இந்த வாரியத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அந்நாட்டு அரசு சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில்,' United States of America' எனக்குறிப்பிடுவதற்கு பதில் ' Unites states of America' என தெரிவித்து இருந்தது. இது நெட்டிசன்களின் கவனத்திற்கு உள்ளாகி பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கினர்.
இது முடிந்த நிலையில் காசா அமைதி வாரிய நிகழ்ச்சியில் ஷெபாஸ் ஷெரீப் அவமானப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது.
நிகழ்ச்சி துவக்கத்தில் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, டிரம்ப் பக்கத்தில் அமெரிக்க அமைச்சர்கள் நின்று கொள்ள, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தோனேஷியா நாட்டில் இருந்து வந்தர்கள் டிரம்ப்புக்கு பின் இருந்த இடத்தை பிடித்துக் கொண்டனர். இதனால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பிரதமர் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டார். இதனால் 5.5 அடி உயரம் கொண்ட ஷெபாஸ் ஷெரீப் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்கு அசவுகரியமான நிலை ஏற்பட்டது.
தூதரக ரீதியில் டிரம்ப்புக்கு அருகில் நிற்பதை வைத்து நெருக்கமாக இருப்பது பற்றி பெருமை பேசுவதற்கான நிலை ஏற்படும். ஆனால், ஆரம்ப காலத்தில் டிரம்ப் உடன் நெருக்கம் காட்டி வந்த பாகிஸ்தான் தற்போது அதனை இழந்துவிட்ட நிலையே ஏற்பட்டுள்ளது.
இதன் பிறகு,நிகழ்ச்சியில் டிரம்ப் பேசிக் கொண்டு இருந்த போது, இந்தியா பாகிஸ்தான் குறித்து பேசினார். அப்போது பாகிஸ்தான் பிரதமரை எழுந்து நிற்கும்படி டிரம்ப் கூறினார். உடனடியாக ஷெபாஸ் ஷெரீப்பும் எழுந்து நின்றார். அதன் பிறகு , அவரைப்பற்றி ஏதும் கூறாமல், பிரதமர் மோடியை புகழ்ந்து பேச டிரம்ப் துவங்கினார். இதனால், ஷெபாஸ் ஷெரீப்புக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. சத்தம் இல்லாமல் அவர் அமர்ந்துவிட்டார்.
இது போதாது என பிறகு ஷெபாஸ் ஷெரீப் பேசும்போது இந்தியா பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்திவிட்டார் என புகழ்ந்து பேசினார். ஆனால், பல முறை இந்தியா திட்டவட்டமாக இதனை நிராகரித்து இருந்தது. இதற்காக நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு மீண்டும் ஒரு முறை பாகிஸ்தான்பிரதமர் உள்ளாகினார்.
கடைசியாக, நிகழ்ச்சி முடிந்ததும் , டிரம்ப்பை கட்டியணைக்க ஷெபாஸ் ஷெரீப் அருகில் வந்து குனிய முயன்றார். ஆனால், முதலில் அதனை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை. பிறகு அவரை அழைத்து டிரம்ப் அனுப்பி வைத்தார்.
இது குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த கால வரலாறு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். அவர் ரஷ்ய அதிபரை சந்திக்க சென்றார். ஆனால், துருக்கி அதிபருடன் புடின் பேசிக் கொண்டு இருக்கிறார் என சொல்லி அவரை அதிகாரிகள் காக்க வைத்தனர்.இதன் பிறகு அவர் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்து பேசிவிட்டு வந்தார். இது குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜெர்மனியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரிடம் அதிகாரி ஒருவர் அடையாள அட்டையை கேட்ட நிகழ்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
20 பிப்,2026 - 21:58 Report Abuse
சென்ற இடமெல்லாம் இவருக்கு அடிடிதான் மிச்சம் போலிருக்கிறது பரவாயில்லை என்று எதையுமே பொருட்படுத்தாமல் மென்மேலும் அவர் டிரம்பிடம் அவமரியாதைகளை பெற்றுக்கொண்டேதான் இருக்கிறார் உக்ரேன் அதிபர் ஸிலங்கியும் இவரும் டிரம்பு சொன்னபடி செய்ய வேண்டுமாம் அவர் இவர்களை ஆடு என்றால் இவர்கள் ஆட வேண்டுமாம் உட்காரு என்றால் இவர்கள் உட்கார வேண்டுமாம் கோட்டு போட்டுக்கொண்டுதான் வெள்ளை மாளிகைக்குள் நுழைய வேண்டும் என்று டிரம்பு ஸிலாங்கிக்கு சொன்னால் அதுபடி செய்ய வேண்டுமாம் பாகிஸ்தான் அதிபர் ராமானுவ தளபதி இவர்களை விருந்துக்கு கூப்பிட்டால் உடனே வெள்ளை மாளிகைக்கு ஓடி வர வேண்டுமாம் விருந்து உண்டுவிட்டு செல்ல வேண்டுமாம் இதுதான் டிரம்மில் அரசியல் விலைட்டுகள் 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
20 பிப்,2026 - 21:38 Report Abuse
ஜிகாதிகளுக்கு அவமானம் எல்லாம் கிடையாது.. நிரந்தரமாக கொலைவெறியில் திரிவார்கள் - அல்லது வேறு ஒருவனை வைத்து கொலை செய்வார்கள். 0
0
Reply
Thana Pandian - ,
20 பிப்,2026 - 21:25 Report Abuse
எதை விதைகின்றமோ அதை மட்டும் தான் அறுவடை செய்ய முடியும் 0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
20 பிப்,2026 - 21:16 Report Abuse
இஸ்லாமிக் ரிப்பப்ளிக் ஆப் பாகிஸ்தானை எவ்வளவு கேவல படுத்தினாலும் துடைத்து போட்டுவிட்டு முக்கிய வேலையான பயங்கரவாத ஜிகாதிகளை உற்பத்தி செய்யும் குலதொழிலை செய்ய போய்விடுவார்கள். உலக நாடுகள் இந்த மானங்கெட்ட நாட்டை Time Passing காகவே வைத்து உள்ளன. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement