பைக் திருட்டு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேடை அருகே பைக் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருப்பெயர் தக்கா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; இவர் கடந்த 18ம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement