குளத்தில் மூழ்கி முதியவர் பலி

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த வெங்கடேசபுரம் சேர்ந்தவர் மாணிக்கம், 72; இவர் கடந்த 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார். அப்போது குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவலறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி இறந்த முதியவரின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement