காட்சி பொருளான பேட்டரி வாகனம்
திருப்பூர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில், திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்; வெள்ளிக்கிழமை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களுக்கு வரும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 'பேட்டரி' வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தனியார் அமைப்புகள் பங்களிப்புடன், 'பேட்டரி' வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலக பணியாளர்கள், அவற்றை, இயக்கி வந்தனர். குறிப்பாக, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை இயக்கியதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர். இந்நிலையில், சிறிய பழுது காரணமாகவும், வாகனத்தை இயக்க ஆட்கள் இல்லாமலும், வாகனம் பல மாதங்களாக பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 'பேட்டரி' வாகனத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும். தேர்தல் காலத்தில், கலெக்டர் அலுவலகத்தில் பயன்பாடு குறைந்தாலும், அரசு மருத்துவமனை போன்ற பகுதியில்தற்காலிகமாக பயன்படுத்த வழங்கலாம் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
-
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்
-
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா