இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார் நெதன்யாகு
டெல் அவிவ்: அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வந்து உற்சாகமாக வரவேற்றார்.
அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதல் ஒரு பக்கம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. இப்படியான சர்வதேச அரசியல் நிலவரங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
டெல் அவிவ் நகரத்தில் விமானத்தில் இருந்து உற்சாகமாக இறங்கிய பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தமது மனைவி சாரா உடன் நேரில் சென்று வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவு;
இஸ்ரேல் பயணம் உண்மையிலேயே ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க வருகை. இந்த பயணம், நம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் இருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பார்லி.யில் உரை நிகழ்த்துகிறார். இதன் மூலம் இஸ்ரேல் பார்லி.யில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.
மேலும்
-
எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் பில்கேட்ஸ்
-
வடகிழக்கு மாநில பெண்களை அவதூறாக பேசிய தம்பதி சிறையில் அடைப்பு; இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்
-
பஞ்சாபில் பயங்கர சதி முறியடிப்பு; எல்லை தாண்டிய கடத்தல் கும்பல் கைது; விசாரணையில் திடுக்
-
லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பறிமுதல்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்