அரசு பஸ் ஜப்தி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் குன்னூரை சேர்ந்தவர் உத்தமன் 41, காண்ட்ராக்டர்.
இவர் 2019 செப். 13ல் டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ராஜபாளையம் செல்லும்போது அரசு பஸ் மோதி காயமடைந்தார்.
இதில் ரூ. 40 லட்சம் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் அவருக்கு ரூ. 16 லட்சத்து 52 ஆயிரத்து 646ஐ, மதுரை அரசு போக்குவரத்து கழகம் வழங்க 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி 2025ல் உத்தமன், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு ரூ. 22 லட்சத்து 85 ஆயிரத்து 624 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இதனையடுத்து மதுரை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை
மதுரை கோட்ட அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
-
நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
-
டில்லி - ஷிம்லா போலீசாரின் மோதல் முடிவுக்கு வந்தது; இளைஞர் காங்கிரசார் 3 பேர் கைது
-
பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்
-
தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்