வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள்
திருப்பூர்: தி ருப்பூரில், வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், காரியவிடுதி பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு, 25, இளையராஜா, 36; நண்பர்கள். இருவரும் திருப்பூர், வீரபாண்டி, பிரியங்கா நகரில் தங்கி சாய ஆலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
கடந்த, 2009 ஜன., 13ம் தேதி பொங்கல் விடுமுறையையொட்டி சாய ஆலையில் தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்தனர். அன்றிரவு தான் கடனாக கொடுத்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை இளையராஜாவிடம் பிரபு கேட்டார். கோபமடைந்த இளையராஜா, இரும்பு கம்பியால் தாக்கியதில் பிரபு இறந்தார். பிரபுவின் பையில் இருந்த, 6 ஆயிரத்து, 800 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு, அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி வஞ்சி நகரில் உள்ள கோவில் கிணற்றில் போட்டு விட்டு இளையராஜா தப்பினார். இந்த வழக்கில், இளையராஜாவை போலீசார் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி பத்மா, நேற்று இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் விவேகானந்தன் ஆஜரானார்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
-
நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
-
டில்லி - ஷிம்லா போலீசாரின் மோதல் முடிவுக்கு வந்தது; இளைஞர் காங்கிரசார் 3 பேர் கைது
-
பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்
-
தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்