வார இறுதியில் சரிந்தது தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை: வார இறுதியில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.160 சரிந்து ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. புதிய உச்சமாக ரூ.1.20 லட்சத்தை கடந்தும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.


இந்த வாரத்தின் தொடக்க நாட்களில் ரூ.2000 வரை உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை, நேற்று ரூ.80 குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 220 ரூபாயிக்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து 14 ஆயிரத்து 900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராக்கெட் வேகத்தில் எகிறி வரும் தங்கத்தின் விலை, கடந்த இரு தினங்களில் மட்டும் வெறும் 240 குறைந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், வெள்ளி கிலோவுக்கு 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.


கடந்த 5 நாள் தங்கம் விலை நிலவரம்:



26-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,360


25-02-2026- ஒரு சவரன் (22 காரட்) ரூ.1,19,440


24-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,19,120


23-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,18,880


22-02-2026- ஒரு சவரன் ((22 காரட்) ரூ.1,17,440

Advertisement