பிரதமரின் இஸ்ரேல் பயணம் ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய அரசு
புதுடில்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா - இஸ்ரேல் இடையே ஏஐ, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது; பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் இஸ்ரேலுடன் இந்தியாவின் விரிவடைந்து வரும் கூட்டாண்மையை இந்தப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துவதிலும், மேற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் விமானநிலையத்திற்கே வந்து அழைத்துச் சென்றதும், திரும்ப வந்து வழியனுப்பியதும் உலகமே வியக்கிறது. மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்கள் மோடிஜியைப் போலவே உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவர் மனைவியான சாரா பாஜக கட்சியின் ஆரஞ்சு கலர் கோட்-சூட்டில் கணவருடன் விமானநிலையம் வந்து வரவேற்றார். எதிரி நாடுகளுக்கு வயிறு எரிந்திருக்கும்
பாவம்யா படிக்க படிக்க அமைதிகள் அமைதி இழப்பார்கள்.
Israel has started bombing Hezbollah targets in Leb()non, and Afghanistan started pounding Pakistan as soon as PM Modi left Israel.
இந்தியாவிலிருந்து பத்து மில்லியன் இந்துக்களை இங்கு வரவழைக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து இந்துக்கள் எங்கே சென்றாலும் அந்த நாட்டுக்கு உறுதுணையாக நாட்டுப் பற்றுடன் இருப்பார்கள். அந்த நாட்டுக்கு ஒரு காலமும் துரோகம் செய்ய மாட்டார்கள் இஸ்ரேல் அதிபர்: பெஞ்சமின் நெதன்யாகு.மேலும்
-
ராஜஸ்தானில் சொகுசு பஸ்-டிரக் லாரி மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலி
-
டில்லியில் செய்தது போன்று இங்கும் செய்ய நினைக்கின்றனர்: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு
-
இந்தியா வந்தார் கனடா பிரதமர் மார்க் கார்னி
-
நேபாளத்தில் பொதுத்தேர்தல்; மார்ச் 2 முதல் 3 நாட்களுக்கு இந்திய எல்லை மூடல்
-
பாக்., பதில் தாக்குதல்: ஆப்கனில் 133 பேர் பலி