சீரான விலையில் வெற்றிலை விற்பனை
கிருஷ்ணராயபுரம்: கிருஜ்ணராயபுரம் பகுதிகளில், சீரான விலையில் வெற்றிலை விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, பொய்கைப்புத்துார், கள்ளப்பள்ளி, திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வெற்றிலைகள் பறிக்கப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 5,000 ரூபாய்க்கு விற்பனையானது .வெற்றிலைகளை மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கி, வெளியூர்களுக்கு வியாபாரிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். விலை ஏற்ற இறக்கமின்றி, சீரான விலையில் வெற்றிலை விற்பனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
16 கண் மதகு சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க திட்டம்
-
இட்லி கடைக்காரர் தற்கொலை முயற்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்?
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு தலைவி அறிவுரை
-
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: ஆலை டிரைவர் பலி
-
அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்
-
பகவத் கீதை, துளசி மாடத்தை சுமந்து மகாராஷ்டிரா பெண்கள் ஊர்வலம்
Advertisement
Advertisement