கம்மநல்லுார் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கம்மநல்லுாரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 27 முதல் விழா தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று அம்மனுக்கு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மேலும் கிராம மக்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை செய்தனர். தொடர்ந்து மா விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

Advertisement