பிப்., மாதம் இயல்பை விட அதிக மழை குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ., தகவல்
கரூர்: ''கரூர் மாவட்டத்தில் பிப்., மாதம் இயல்பை விட அதிகளவில் மழை பெய்துள்ளது,'' என, டி.ஆர்.ஓ., விமல்ராஜ் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, டி.ஆர்.ஓ., விமல்ராஜ் பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 4,778 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 13 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுதானிய விதைகள், 35.950 மெட்ரிக் டன், பயறு வகைகள், 10.063 மெட்ரிக் டன், எண்ணை வித்துக்கள், 1.992 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., நடப்பு பிப்ரவரி மாதம், 27.82 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான மழையளவு, 16.80 மி.மீ., அளவை விட, 11.02 மி.மீ., அதிகமாக பெய்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், துணை கலெக்டர் சுவாதிஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அபிராமி, வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், ஆர்.டி.ஓ., முகமது பைசல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாவித்திரி உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
16 கண் மதகு சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க திட்டம்
-
இட்லி கடைக்காரர் தற்கொலை முயற்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்?
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு தலைவி அறிவுரை
-
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: ஆலை டிரைவர் பலி
-
அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்
-
பகவத் கீதை, துளசி மாடத்தை சுமந்து மகாராஷ்டிரா பெண்கள் ஊர்வலம்