திருமுக்கூடலுார் அரசு பள்ளியில் ஆண்டு விழா

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியம், திருமுக்கூடலுார் நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.


தலைமை ஆசிரியர் (பொ) மணிகண்டன் தலைமை வகித்தார். ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தொழிலதிபர் கூடலரசன் பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் வளர்மதி, மகேஸ்வரி, பிரியா, ராமேஸ்வரி, பிரீத்தா, திவ்யா உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிக்கான பயிற்சி அளித்தனர்.


அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சந்தானத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement