வெட்கக்கேடானது!
பிரதமர் மோடியின் வருகைக்கு பின், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக கூட்டுத் தாக்குதலை துவங்கியுள்ளன. அவர், இஸ்ரேல் சென்றது கோழைத்தனமான செயல்; அந்நாட்டுடன் துணை நிற்போம் என கூறியது அதைவிட வெட்கக்கேடானது. அவரது நெருங்கிய நண்பர்கள் என பல முறை அழைத்த இரண்டு தலைவர்களால் தான் இப்போது போர் துவங்கப்பட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்.,
நம்பிக்கை வையுங்கள்!
காங்கிரசும், அதன் தலைவர்களும் ஒவ்வொரு முக்கிய விவகாரத்திலும், எதிர்மறையான கருத்துகளை கூறுவதை இயல்பாக கொண்டுள்ளனர். குழந்தைத்தனமான அறிக்கைகளை அந்தக் கட்சியினர் வெளியிடுவதை தவிர்த்து, மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் துவங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.
கவுரவ் பாத்தியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
ஏன் வாபஸ் பெற்றார்?
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விசாரணை நீதிமன்றம் விடுவித்த பின், உயர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது. இதேபோல் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தண்டனை கிடைக்கும். நிரபராதி என்றால், புதிய கொள்கையை ஏன் வாபஸ் பெற்றார் என்பதை விளக்க வேண்டும்.
ஆர்.பி.சிங் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
காங்கிரஸ் கட்சிக்கு மோடியைக் கண்டாலே பயமாக இருக்கிறது. அவர் இஸ்ரேல் ஏன் சென்றார். அமெரிக்கா ஏன் சென்றார் என்று கேள்விகள் கேட்கும் அறிவிலிகள் அவர் சொன்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் சண்டை போட ஆரம்பிக்குமா என்பதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்பே இஸ்ரேலிடமும், ரஷ்யாவிடமும் சண்டை தேவையில்லை சமாதானமாக போங்கள் என்று தான் கூறி உள்ளார். அப்படி இருக்கும் போது இப்போது போரை ஆரம்பியுங்கள் என்று கூறுவாரா ? அப்படி கூறினாலும் அந்த நாட்டு அதிபர்கள் அவர்களுக்கு எதி நன்மையோ அதைத்தானே செய்வார்கள். அமெரிக்கா ஏன் 100% 50% என வரி விதித்தது அப்போது கேட்காத டிரம்ப் இப்போது கேட்பாரா? அது சரி காங்கிரஸை இந்திய நலனுக்காக பாடுபடுங்கள். இந்தியாவை மேம்படுத்துங்கள் என்று கூறுவதையே கேட்காத இந்திய காங்கிரஸ் இருக்கும் போது மற்ற நாடுகள் உடனே கேட்க வேண்டுமா என்ன?