அமெரிக்கா-ஈரான் மோதல் எதிரொலி; தங்கம், வெள்ளி விலை உயர்வு
சென்னை: ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்றும் (மார்ச் 01) தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளன.
நேற்றைய நிலவரம்
நேற்று (பிப்ரவரி 28) காலை தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 15,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, 1,24,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு 25,000 ரூபாயும், சவரனுக்கு 5,200 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்றும் (மார்ச் 01) தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளன. சென்னையில் இன்று (மார்ச் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியும் உயர்வு
கிராமுக்கு 225 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 5200 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 1800 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 325 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்வது ஒரு பொருளாதார முடக்கம். ஆக பணம் எங்கேயாவது ஓரிடத்தில் சேர்ந்து தேங்கி நிற்கும். இதனால் வேலையிழப்பு, வறுமை ஏற்படும்.மற்றும் நாடுகள் மற்றும் மக்களிடையே பணம் புழக்கம் குறைந்து விடும்
WAITE FOR ONE 20 /30 DAYS IT WILL CROSSS 165000 SURE WAITE AND SEEE MIND MY WORDS
ரொம்ப கரெக்ட், சண்டை நின்ற வுடன் அப்படியே இறங்கி வீதிக்கு வந்துடும்
சும்மாவே தங்கம் விலை உயர்வை நோக்கிக் கொண்டு சென்று கொண்டதுமேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்