யார் இந்த கமேனி!

6


-நமது நிருபர்-


ஈரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப்புரட்சி ஏற்பட்டது. அதற்கு முன் அந்த நாட்டில் ஆட்சி நடத்தியவர் மன்னர் ஷா எனப்படும் முகமது ரெஸா பஹலவி.

அவரது ஆட்சிக்காலத்தில் ஈரான், மேற்கத்திய நாடுகளை போலவே நவீன மயமாக்கத்தை தீவிரமாக செய்து மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருந்தது. ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன. வெண்மைப்புரட்சி என்ற பெயரில் ஷா மன்னர் கொண்டு வந்த நில சீர்திருத்தமும், நவீன மயமாக்கமும், மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்கவில்லை.



அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மக்களை துாண்டி போராட்டங்களில் ஈடுபடச் செய்தனர். 1977 முதல் நடந்த போராட்டங்கள், 1979ம் ஆண்டு மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டதுடன் முடிவுக்கு வந்தன.

இஸ்லாமியப் புரட்சி என்ற பெயரில் நடந்த இந்த போராட்டம் முடிவில், ருடால்ப் கொமேனி தலைமையிலான மதகுருக்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது முதல், பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு போன்ற கடுமையான விதிமுறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆட்சியை அமல் செய்தனர். மதகுருக்கள் தான் ஆட்சியாளரை முடிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது.
அப்படி 1979 முதல் ஆட்சி நடத்திய ருடால்ப் கொமேனி, 1989ம் ஆண்டு காலமானார். அவருக்கு பின், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முதன்மையானவரான அலி கமேனி (இருவரும் வேறு வேறு நபர்கள், உறவினர்கள் அல்ல), நேற்றைய இஸ்ரேல், அமெரிக்க படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர், 1981 முதல் 1989ம் ஆண்டு ஈரான் அதிபராகவும் இருந்தவர்.

இறந்த கமேனி யார்?



போரில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனி குறித்து விவரம் பின்வருமாறு:

* ஈரான், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. இதனால், அந்த பிரிவு இஸ்லாமியர்கள், ஈரான் மதகுருவையே தங்கள் வழிகாட்டியாக கருதுகின்றனர். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக கமேனி இருந்தார். அவர் மதகுருவாக மட்டுமின்றி, நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் முக்கிய புள்ளியாகவும் இருந்து வந்தார்.


* உலகில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் நாடுகள் அனைத்துக்கும் ஈரான், நேரடியாகவும், மறைமுகமாகவும் பண உதவியும், ராணுவ உதவியும் செய்து வந்தது. இதன் பின்னணியில் இருந்தவர் கமேனி தான்.



* 1939ல் பிறந்த இவர், 1979ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.


* புரட்சிக்குப் பிறகு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த இவர், 1989ல் முதல் உச்ச தலைவர் கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


* இவர் சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களை இயக்கி வந்தார். இதன் மூலம் அந்நாடுகளின் அரசியலில் ஈரான் செல்வாக்கு பெற்றதாக இருந்து வருகிறது.

Advertisement