தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் இன்று மிக கடுமையாக தாக்க போவதாக கூறியது. பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும். தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் பதில்
அதேநேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியதாவது: கமேனி படுகொலை பெருங்குற்றம். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் தராமல் ஓய மாட்டோம். பெரும் குற்றம் இளைத்தோர் வருத்தப்படும் வகையில் பதிலடி அமையும். நாங்கள் தரப் போகும் பதிலடி இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
பா மாதவன் - chennai,இந்தியா
01 மார்,2026 - 14:36 Report Abuse
போன மாதம் வெனிசுலா நாடு. இந்த மாதம் ஈராக். இப்படியே எல்லா நாட்டையும் தாக்கி அழிக்க நினைக்கும் அமைதியை விரும்பாத இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமாம். 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
01 மார்,2026 - 19:50Report Abuse
ஈராக் இல்லை.. ஈரான் 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
01 மார்,2026 - 13:38 Report Abuse
இந்த அமெரிக்க துக்ளக் அவரது அரசியல் வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல காரியம் இந்த ஈரான் சர்வாதிகாரியை போட்டுத் தள்ளியது தான் அதுவும் இஸ்ரேல் உதவியுடன் 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
01 மார்,2026 - 12:57 Report Abuse
அமெரிக்காவின் இந்த இந்தச் செயலால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். தலைவலிகள். ஏறப்போகும் கச்சா விலை. நாட்டிலுள்ள ஒவ்வொரு அமெரிக்க தூதரகத்துக்கும் பலநூறு கோடிகள் மேல் செலவு செய்து காலவரையற்ற கூடுதல் பாதுகாப்பு போடும் நிர்ப்பந்தம், மற்றும் கூடுதல் நிதிச்சுமை. எவரையுமே, எந்த நாட்டையுமே டிரம்ப் நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை. 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
01 மார்,2026 - 12:50 Report Abuse
ஒரு காலத்தில் அதாவது ஷா அதிபராக இருக்கையில் ஈரான் அமெரிக்காவின் கைப்பாவை. மேற்கத்திய கலாச்சாரம் அங்கு தழைத்தது. எங்கே முதலுக்கு மோசமாகி விடுமோ என்று எண்ணி அடிப்படைவாத மத குருமார்கள் ஆட்சியை பிடித்தார்கள். அப்போதிலிருந்து பிரச்சினை தான் இரு நாட்டுக்கும். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01 மார்,2026 - 12:41 Report Abuse
அதான் அந்த கமேனியையே தூக்கிட்டீங்களே. இனியும் என்ன விளைவுகள் பயங்கரமாக இருக்கும்? அடுத்து மன்னராட்சியை விரும்பாத, அதே சமயம் ஜனநாயக ஆட்சியை அமுல்படுத்த விரும்பும் ஒருவனை நீங்களே தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துங்கள். இனியாவது அங்குள்ள மக்கள் நிம்மதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைவனின் கீழ் நிம்மதியாக வாழட்டும். 0
0
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
01 மார்,2026 - 13:56Report Abuse
அதெப்படி நிம்மதியாக இருக்க விடுவாரு? அவுரு அகராதியிலேயே கிடையாதே? அமெரிக்காவின் அகராதியிலேயே கிடையாதே? உலகமெல்லாம் அமெரிக்காவுக்கு தொண்டு செய்து அவுங்களை சந்தோஷ படுத்தணும் இது தான் விதி. 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
01 மார்,2026 - 12:27 Report Abuse
உண்மையில் ஈரானியர்கள் பிளவுபட்டுள்ளார்கள் என்றே நினைக்கிறேன் , புத்திசாலிகளை சரணடைய வைக்கும் யுக்தியை அமேரிக்கா செவ்வனே செய்து வருகிரது 0
0
Reply
Vasan - ,இந்தியா
01 மார்,2026 - 12:12 Report Abuse
அஸ்தமனம் என்பது, நிரந்தரமல்ல, மேற்கே விதைத்தால்,கிழக்கே முளைக்கும் 0
0
Reply
மேலும்
-
ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு
-
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்
-
ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கியது யார்: எங்களுக்கு தெரியாது என்கிறது சீனா
-
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்; இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
-
குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்
-
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்
Advertisement
Advertisement