சென்னை-ஒடிசா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

புவனேஸ்வர்: சென்னை, ஒடிசா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) எல்ஷின்ஹோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் சென்னை அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்டி ஒடிசா அணிக்கு 68வது நிமிடத்தில் கார்லஸ் டெல்கடோ ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் சென்னை அணி 11வது இடத்தில் உள்ளது. இரண்டாவது 'டிரா'வை பதிவு செய்த ஒடிசா அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.


மும்பையில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் மும்பை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

Advertisement