ஆஸ்திரேலியா வெற்றி துவக்கம்
பெர்த்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நேற்று துவங்கியது. மொத்தம் 12 அணிகள், 3 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. பெர்த்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. சாம் கெர் (14வது நிமிடம்) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஹன்னா கிரீன் 'சாம்பியன்'
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பெண்களுக்கான உலக கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஹன்னா கிரீன், 274 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே 2024ல் கோப்பை வென்றிருந்தார். அமெரிக்க வீராங்கனை ஆஸ்டன் கிம் (275 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.
கோப்பை வென்றார் மெத்வெடேவ்
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூ மோத இருந்தனர். கடைசி நேரத்தில் காயத்தால் நெதர்லாந்து வீரர் விலகினார். மெத்வெடேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் தனது, 23வது பட்டத்தை கைப்பற்றினார்.
எக்ஸ்டிராஸ்
* ஐதராபாத்தில், வரும் மார்ச் 8-14ல் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்று நடக்கவுள்ளது. இதற்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் கோல்கீப்பர் சவிதா புனியா இடம் பெறவில்லை. கேப்டனாக சலிமா நீடிக்கிறார். இந்திய அணி, உருகுவே (மார்ச் 8), ஸ்காட்லாந்து (மார்ச் 9), வேல்ஸ் (மார்ச் 11) அணிகளுடன் விளையாடுகிறது.
* ஹரியானாவின் குருகிராமில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஜீல் தேசாய் 6-2, 7-6 என, ரஷ்யாவின் போலினா குஹாரென்கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
* ஆஸ்திரேலியாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைஷ்ணவி சவுத்ரி 2-6, 3-6 என, ஆஸ்திரேலியாவின் லிசெட் கப்ரேராவிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
* சண்டிகரில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் (21 கி.மீ.,) இந்திய வீரர் ஹர்மன்ஜோத் சிங் முதலிடம் பிடித்தார். பின், 10 கி.மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சாஹில் கபூர், சோனியா முதலிடம் பிடித்தனர்.
* 'டி-20' உலக கோப்பையில் 'சூப்பர்-8' சுற்றோடு வெளியேறியதால், இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார்.
மேலும்
-
கோழி தீவன லாரிகளால் கடும் சுகாதார சீர்கேடு
-
ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும்: டிரம்ப்
-
உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மாற்றம்
-
ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?
-
ஈரான் தாக்குதல் எதிரொலி; யுஏஇயின் பங்குச்சந்தைகள் மூடல்
-
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவியவர்கள்...