உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் மாற்றம்

1

* என்.சதீஷ்குமார், ஆர்.பூர்ணிமா அமர்வு- பொதுநல மனுக்கள், ரிட் மற்றும் ரிட் மேல்முறையீடு 2025 லிருந்து.


* ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜோதிராமன் அமர்வு- முதலாவது மேல்முறையீடு, 2024 வரையிலான ரிட் மற்றும் ரிட் மேல்முறையீடு, நடுவர்மன்ற உத்தரவு மேல்முறையீடு.


* என்.ஆனந்த் வெங்கடேஷ், பி.தனபால் அமர்வு- ஆட்கொணர்வு மனு, கிரிமினல் மேல்முறையீடு.


* பி.புகழேந்தி- சி.பி.ஐ.,லஞ்ச ஒழிப்புத்துறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கிரிமினல் மேல்முறையீடு.


* ஹேமந்த் சந்தன்கவுடர்- தொழிலாளர் ரிட் மனுக்கள், தொழிலாளர் நீதிமன்றம், கூட்டுறவு தீர்ப்பாய உத்தரவுகளுக்கு எதிரான ரிட் மனுக்கள்.

* கே.முரளிசங்கர்- சிவில் பல்வகை மேல்முறையீடு, சிவில் பல்வகை இரண்டாம் மேல்முறையீடு, 2013 மற்றும் 2014க்குரிய இரண்டாவது மேல்முறையீடு.



* எஸ்.ஸ்ரீமதி- நில சீர்திருத்தம், நில குத்தகை, நகர்ப்புற நில உச்சவரம்பு, நிலம் கையகப் படுத்துதல், பட்டா, ஆர்.டி.ஐ.,சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் ரிட் மனுக்கள், 2022 வரையிலான பணியாளர்கள் ரிட் மனுக்கள்.
* டி.பரதசக்கரவர்த்தி- மோட்டார் வாகனம் மற்றும் அதற்கான வரிகள், ஏற்றுமதி, இறக்குமதி வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால்துறை, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை, வனம், தொழிற்சாலைகள், அறநிலையத்துறை, வக்புவாரிய ரிட் மனுக்கள், ரிட் பல்வகை மனுக்கள், கனிமவளம், பதிவுத்துறை ரிட் மனுக்கள்.

* ஆர்.விஜயகுமார்- வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுதல், வழக்கை ரத்து செய்தல், வேறு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்றுதல் தொடர்பான மனுக்கள் 2024 முதல்.

* எம்.சுதீர் குமார்- பணியாளர்கள் தொடர்புடைய ரிட் மனுக்கள் 2023 லிருந்து.

* எல்.விக்டோரியா கவுரி- கிரிமினல் சீராய்வு, ரிட்( சி.ஆர்.பி.சி.,) அனைத்து ஆண்டுகளுக்குரியவை

* பி.பி.பாலாஜி- இரண்டாவது மேல்முறையீடு-2017 லிருந்து.

* கே.கே.ராமகிருஷ்ணன்- ஜாமின், முன்ஜாமின் மனுக்கள், 2023 வரையிலான வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுதல், வழக்கை ரத்து செய்தல், வேறு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்றுதல் தொடர்பான மனுக்கள்.

* வி.லட்சுமிநாராயணன்- சிவில் சீராய்வு பி.டி., மற்றும் என்.பி.டி.,-அனைத்து ஆண்டு களுக்குரியவை, நடுவர்மன்ற மேல்முறையீடு, கம்பெனி மேல்முறையீடு, 2015 மற்றும் 2016க்குரிய இரண்டாம் மேல்முறையீடு.

* பி.வடமலை- முதலாவது மேல்முறையீடு-அனைத்து ஆண்டுகளுக்குரியவை, 2012 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் நீதிபதிகளுக்கு வழக்குகள் விசாரணை மாற்றியமைக்கப்படுகிறது. மேற்கண்டவாறு மதுரைக் கிளையில் நாளை (மார்ச் 2) முதல் அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வர்.

Advertisement