ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும்: டிரம்ப்
வாஷிங்டன்: ''ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரத்தவெறி
ஈரான் மக்கள் கமேனி உயிரிழப்பை கொண்டாடினர். இந்த நடவடிக்கைகள் சரியானவை. அமெரிக்கர்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக, இந்த பயங்கரவாதிகள் 'அமெரிக்காவிற்கு மரணம்' அல்லது 'இஸ்ரேலுக்கு மரணம்' என்ற கோஷங்களை எழுப்பி அமெரிக்காவைத் தாக்கி வருகின்றனர். இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது. சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து ஈரான் மக்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தைரியமாக, வீரமாக, உங்கள் நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 36 மணி நேரமாக, அமெரிக்காவும் எங்கள் கூட்டளாளியும் இணைந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட நூற்றுக்கணக்கான இலக்குகளை தாக்கியுள்ளோம். இப்போதுதான், ஒன்பது கப்பல்கள் மற்றும் அவற்றின் கடற்படைக் கட்டடத்தை நாங்கள் தகர்த்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஈரானின் முழு ராணுவத் தலைமையும் போய்விட்டது. அவர்களில் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற சரணடைய விரும்புகிறார்கள்.
சக்திவாய்ந்த நாடு
இந்த நேரத்தில் போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவை நமது இலக்குகள் அடையப்படும் வரை தொடரும். அமெரிக்கா இப்போது மீண்டும் உலகின் பணக்கார, மிகவும் சக்திவாய்ந்த நாடாக உள்ளது. நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் ஆட்சி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும். பயங்கரவாதப் படைகளை வளர்க்கும் ஒரு நாடு அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது, இது உலகை அவர்களின் தீய விருப்பத்திற்கு அடிமையாக்க அனுமதிக்கும். நாங்கள் அதை நடக்க விடப் போவதில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
இஸ்ரேலுக்கு நேரம் நெறுங்கிவிட்டது
விபரீத பழி வாங்கும் புத்தி கொண்டவர்கள். இசகு பிசகாக ஏதாவது செய்து விட போகிறார்கள்.
அமெரிக்காவிற்க்கோ அல்லது இஸ்ரேலுக்கோ காமேனியை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர் ஒரு நாட்டின் மிக சக்தி வாய்ந்த தலைவர்... அவரை கொல்வது கடைந்தெடுத்த ...ஈரானின் மறைமுகப்போர் வரும் காலங்களில் மிகவும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படும்.. ட்ரம்ப் பேசுவது பாம்பிற்கு பாகிஸ்தானுக்கு பால் வார்த்து கொண்டே அணு ஆயுதத்தை இஸ்லாமிய நாடுகள் வைத்து இருக்க கூடாது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம் .....தாலிபான்கள் அமெரிக்கக்காரனை ஒரு வழி செஞ்சது போல அடுத்தது ஈரானின் படைகள் செய்ய தயாராகி விடும் ....
ஈரானிய தீவிரவாதம் என்பது உலகம் தழுவிய தீய சக்தி. காஷ்மீரி பஹல்கம் ஹிந்துகள் கொலையில் ஈரான் உதவி செய்யும் ஹமாஸ் தீவிரவாதிகள் உதவி செய்து உள்ளனர். எனவே அவர்கள் அழிவது உலகத்திற்கு நல்லது.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போதே டிரம்பை கொல்ல இரண்டு முறை முயற்சி நடந்தது. அதற்கு ஈரான்தான் காரணம் என அப்போதே குற்றச் சாட்டுகள் எழுந்தன. மனுஷன் வச்சு செஞ்சுட்டார்.
முதலில் நீர் அடுத்த நாட்டு விஷயங்களில் தலையிடுவதை நிறுத்தவேண்டும்
உங்களுடைய உள் நோக்கம் அங்க உள்ள எண்ணை வளத்தைச் சுரண்ட வேண்டாம். ஈராக், வெனிசுலா, ஈரான் என்று எண்ணை வள நாடாகப் பார்த்து பார்த்து அடிக்கிறீர்கள். க்ரீன்லாந்து பகுதியை ஆட்டையப்போட நினைப்பது அங்குள்ள கடல் வளத்தைச் சுரண்டவே.
கேட்க மாட்டான். அடிச்சு அடுத்த காசா ஆக்குங்கள்.
இராக் அணு ஆயுதம் இருக்கு என்று அங்கே டன் கணக்கில் எண்ணையும், தங்கத்தையும் கொள்ளையடித்தும், லிபியவிழும் அதே, வெனின்ஸுலாவில் எண்ணையையும் பணத்தையும் கொள்ளையடித்தும் அமேரிக்காவின் கஜானா 10% நிரம்பவில்லை, கடனும் அடையவில்லை. இப்போ இரான், அடுத்து கண்டிப்பாக ஆசியநாடுதான்.
Texas, USA : Two people died in a mass shooting incident in a bar.மேலும்
-
ஈரானில் 3வது நாளாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்; 555 பேர் உயிரிழப்பு
-
தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்
-
ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கியது யார்: எங்களுக்கு தெரியாது என்கிறது சீனா
-
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்; இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
-
குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்
-
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்; சவுதியில் பதற்றம்