ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?

8

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படையினர் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.


@1brஅணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரான் முழுவதும் உள்ள அரசு மற்றும் ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, யாரும் நம்ப முடியாத வெற்றியை அடைந்து விட்டதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படையினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படையினர் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள் குறித்த விபரத்தை அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்;

* பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள்

* லூகாஸ் டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்)

* பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகள்

* தாட் (THAAD) அதீத உயர ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்

* எப்-18,எப்-16, எப்-22 ரக போர் விமானங்கள்

* ஏ-10 தரைவழித் தாக்குதல் விமானங்கள்

* எப்-35 ஸ்டெல்த் போர் விமானங்கள் ( ஸ்டெல்த் விமானம் என்பது ரேடார் கண்களுக்கு புலப்படாது)

* ரேடாரை முடக்கும் இஏ-18ஜி எலக்ட்ரானிக் தாக்குதல் விமானங்கள்

* வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள்

* பி-8 கடல்சார் ரோந்து விமானங்கள்

* ஆர்சி-135 உளவு பார்க்கும் விமானங்கள்

* எம்க்யூ-9 ரீப்பர்ஸ் ஆயுதம் ஏந்திய டிரோன்கள்

* எம்-142 அதி நவீன பீரங்கி ஏவுகணை அமைப்புகள்

* அணுசக்தியால் இயங்கும் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்கள்

* ஏவுகணை அழிப்பு கப்பல்கள்

* டிரோன்களை இடைமறித்து அழிக்கும் அமைப்பு

* வான்வழியே எரிபொருள் நிரப்பும் விமானங்கள்

* சி-17 மற்றும் சி-130 ராணுவ சரக்கு விமானங்கள்

Advertisement