ஈரான் தாக்குதல் எதிரொலி; யுஏஇயின் பங்குச்சந்தைகள் மூடல்
துபாய்: ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது
. பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம்,குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலில் இறங்கி இருக்கிறது.
போர் எதிரொலியாக பிராந்தியம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல, அனைத்து சுற்றுலா தலங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் துபாய் நிதிச் சந்தை ஆகியவற்றின் வர்த்தகம், இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் தாக்குதலில் யுஏஇயில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்