'மாமல்லன்' ஜெயந்தி விழா விமரிசை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், மாமல்லன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக, மாமல்லபுரம் விளங்கியது. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன், இங்குள்ள சிற்பங்களை படைத்தார்.

மல்யுத்த வீரக்கலையில் சிறந்து விளங்கி, 'மாமல்லன்' என பெற்றார். மாசி மாதம் சுவாதி நட்சத்திர நாளில், அவர் பிறந்தார்.

நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சிற்பக்கலை அருங்காட்சியக வளாகத்தில், பல்லவ சேனை படை அமைப்பு தலைவர் பிரபு தலைமையில், விழா கொண்டாடினர். அங்குள்ள மாமல்லன் சிலையின் முன், சிவாச்சாரியார்கள், உலக நன்மை வேண்டி, ஜம்பு மகரிஷி யாகம் நடத்தினர்.

அருங்காட்சியக வளாகத்தில் உள்ள மாமல்லன் சிலை, புறவழி சந்திப்பில் உள்ள, மாமல்லன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement