கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா

திருப்போரூர்: திருப்போரூர் பிரணவமலையில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்து உள்ளது.

இந்த மலைக்கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.

மார்ச் மாத முதல் பிரதோஷமான நேற்று, கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பிரதோஷத்தையொட்டி மாலை 6:00 மணியளவில், சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள மற்ற சிவாலயங்களிலும், பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement