முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புதுச்சேரி: நெட்டப்பாக்கம், கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் (1978-79, 1979-80) ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் 5 ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
உருளையன் பேட்டை, கென்னடி நகர் லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெய்வநாயகம் தலைமை தாங்கினார். வடமலை வரவேற்றார். புண்ணியமூர்த்தி வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
கீதா 'நட்பு ஒரு போதும் முடிவதில்லை' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில், கடந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்த 2 பேரின் உருவப்படத்தை திறந்து, அவர்களது குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
அசோகன் நன்றி கூறினார். குமரகுரு தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை முரளிதரன், ராமலிங்கம், முத்துராமன், பாலு மற்றும் பலர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement