வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆபரண சந்தைக்கு விடுமுறையாக இருந்த நிலையிலும், நேற்று நம் நாட்டில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) ஆபரண தங்கம், கிராம், 15,550 ரூபாய்க்கும், சவரன், 1,24,400 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 320 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 01) தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் உயர்ந்து, 15,775 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,800 ரூபாய் அதிகரித்து, 1,26,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 3.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 7,000 ரூபாய், வெள்ளி விலை கிலோவுக்கு, 30,000 ரூபாய் அதிகரித்தது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு கம்மிமேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்