மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் முன்னோருக்கு தர்ப்பணம்

மயிலாடுதுறை: காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பேர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி மகத்தன்று, நீர்நிலைகளருகே தர்ப்பணம் அளிப்பதால், ஏழு தலைமுறையிலான பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய பாவங்களை போக்கி, புண்ணியங்களை அதிகரிப்பதற்கான புனிதமான நாளாக மாசி மகம் விளங்குகிறது.


மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் 16 புண்ணிய தீர்த்த கிணறுகள் அருகே ஏராளமானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு வேதியர் மற்றும் ஆச்சாரியர் துணை கொண்டு பலிகர்ம பூஜைகள் நடத்தி தானங்கள் கொடுத்து தர்ப்பணம் செய்துவழிபாடு நடத்தினர்.

தற்போது காவிரியில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் நீராட வசதி இன்றி சிரமத்திற்கு ஆளாகினர் இது போன்ற நாட்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத போது நகராட்சி நிர்வாகம் பம்பு செட் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement