அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

15


டெஹ்ரான்: போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் எப் -15 போர் விமானத்தை குவைத்தில் ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் செல்போன் டவர் மீது மோதி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.

இந்நிலையில், ''ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்'' என அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.



அதேபோல், ஈரான் எங்களுடன் பேச தயாராக இருக்கிறது என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இதை ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

3வது நாளாக…!




குவைத் மீது ஈரான் ராணுவம் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துபாய், அபுதாபி, குவைத் விமான நிலையங்களில் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஈரான் ஏவுகணை வீசி தாக்குவதால் துபாய், அபுதாபி, தோஹா நகரங்கள் குண்டு வெடிப்பு சத்தத்தால் அதிர்கின்றன.


இன்று சைப்ரஸ் நாட்டின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள பிரிட்டன் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கியதில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக, சைப்ரஸ் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement