9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை 7ம் நாளாக போராட்டம்
நாமக்கல்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 24 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், மாவட்ட தலைநகரங்களில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 7ம் நாள் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், பாலசுப்ரமணியன், இளங்கோ, சங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும், 'சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை' உடனடியாக இயற்ற வேண்டும்.தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீதம் பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். 2003ம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை, வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று, மீண்டும் வழங்க வேண்டும்.
'டாப்ஸ்' திட்டத்தில், கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும்
-
இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
-
ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை
-
பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
-
ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி