நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை
ப.வேலுார்: மாசி மகத்தையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில், விநாயக பெருமான், முருகர், நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மேடைக்கு முன் கலசங்கள் வைக்கப்பட்டு, தமிழ் முறைப்படி திருவாசகம், தேவாரம், திருவெண்பாவை ஓதலுடன் பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு மங்கள வாத்தியம், கைலாய வாத்தியம், சங்கநாதம் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகிகள்
செய்திருந்தனர்.
மேலும்
-
இந்தியர்கள் பாதுகாப்பு: ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
-
ஈரான் அணுசக்தி நிலையம் போரில் சேதம்; அறிவித்தது சர்வதேச அணுசக்தி முகமை
-
பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகள்: மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து
-
ஈரானில் பாதுகாப்பான இடங்களில் இந்திய மாணவர்கள்: தூதரகம் அறிக்கை
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி