சிவகங்கையில் சோகம்; மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 50 பேர் காயம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
@1brசிவகங்கை திருப்பத்தூர் அருகே அரளிப்பாறையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு மாசிமக திருவிழாவை ஒட்டி இன்று அரசு அனுமதியுடன் மஞ்சு விரட்டு நடந்தது. 250 காளைகள் அவிழ்த்து விடபட்டன. 100க்கும் அதிகமான வீரர்கள் போட்டி போட்டு திமிலை பிடித்து அடக்கினர்.
பல ஆயிரக்கனக்கானோர் மலைக்குன்றின் மீது அமர்ந்து மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர்.
தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடுவதற்கு முன் ஆங்காங்கே வயல்வெளிகளில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் காளைகள் முட்டி சிங்கம்புணரி அருகே நாட்டார் மங்களம் பகுதியை சேர்ந்த ராமநாதன் வயது 23, சுந்தரராஜ் வயது 48 மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் என மூன்று பேர் இறந்தனர். 3 பேரும் மஞ்சு விரட்டு போட்டியை காண வந்தவர்கள்.
மூன்று உடல்களும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (7)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
03 மார்,2026 - 00:21 Report Abuse
இந்த மாதிரி இளைஞர்கள் பலியாக கூடாது. மாடுகளை துன்புறுத்த கூடாது என்று தான் மத்திய அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது. ஏதோ சாதித்தது மாதிரி வேலை இல்லாத உருப்படாத பசங்க மெரினாவில் ரகளை செய்ததன் விளைவு இன்று மூன்று பேர் காலி. 0
0
Reply
Sun - ,
02 மார்,2026 - 23:00 Report Abuse
ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,மெரினாவில் பொங்கியவர்கள் இவர்களில் ஒருவர் கூட இதுவரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் இறந்ததில்லை. இறந்தவர்கள் எல்லாம் ஏழை மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்க்கச் செல்லும் அப்பாவி பொது மக்கள். தேவைதானா இது? தேவைதானா இது? இதை ரொம்ப அழுத்திச் சொன்னால் தமிழின விரோதி என்ற பட்டத்தை நம் மீது சுமத்தி விடுவார்கள்! 0
0
Reply
சாதிக் ஐஷ்வா, கேரளா - ,
02 மார்,2026 - 19:19 Report Abuse
மிகுந்த மன வருத்தம். வீர விளையாட்டுதான். அதற்காக உயிர் பலி கொடுக்கணுமா? அந்த 3 குடும்ப நிலையை யோசித்துபாருங்கள். பாதுகாப்பாக நடத்த கூடாதா? கொம்பு முழுமையாக நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தினாலும் வீரர்கள் மட்டுமே அடக்கமுடியும். ஆனால் கொம்பால் குத்தப்பட்டு சாகும் நிலை வராது அல்லவா? அரசு யோசிக்குமா? 0
0
Reply
சித்தநாத பூபதி, மேட்டமலை - `Ajman,இந்தியா
02 மார்,2026 - 18:49 Report Abuse
மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு ஒரு பிற்போக்கான கலாச்சார அம்சம். சமூகம் பழையது எல்லாம் சிறப்பானது என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். மாடுகள் கம்ப்யூட்டர் படிக்க மனிதனுடன் போட்டி போடுவதில்லை. மனிதன் ஏன் அதன் கொம்பைப் பிடிக்க உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். மதம், மொழி, இனம் எந்தப் பெயரில் வந்தாலும் அறிவால் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் 0
0
Nancy - London,இந்தியா
02 மார்,2026 - 19:43Report Abuse
0
0
MKUMAR - chennai,இந்தியா
02 மார்,2026 - 22:20Report Abuse
உணர்வால் மகிழ்ச்சி தரக்கூடிய செயலை அறிவால் மட்டுமே சீர்தூக்கி பார்க்ககூடாது 0
0
Reply
பிரேம்ஜி - ,
02 மார்,2026 - 18:07 Report Abuse
வீர விளையாட்டு! இறந்தவர்கள் அப்பாவிகள்! ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement