2 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, அந்நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. எனவே, சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஆபரண தங்கம் சவரனுக்கு, 7,000 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 30,000 ரூபாயும் அதிகரித்தன.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 01) ஆபரண தங்கம் கிராம், 15,775 ரூபாய்க்கும், சவரன், 1,26,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 325 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (மார்ச் 02) தங்கம் விலை கிராமுக்கு, 115 ரூபாய் குறைந்து, 15,660 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 920 ரூபாய் சரிவடைந்து, 1,25,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 315 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கம் விலை குறையாதா அவ்வளவு தான்மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு