ரூ.18.20 லட்சத்துக்கு அரூரில் பருத்தி ஏலம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 130 விவசாயிகள், 162 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,809 முதல், 8,289 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 162 குவிண்டால் பருத்தி, 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 30 விவசாயிகள், 52 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 7,769 முதல், 8,170 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 52 குவிண்டால் பருத்தி, 5.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement