ஸ்மிருதி மீண்டும் 'நம்பர்-1' * ஒருநாள் பேட்டர் தரவரிசையில்...
துபாய்: ஒருநாள் பேட்டர் தரவரிசையில் மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார் ஸ்மிருதி மந்தனா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகள் பெற்று, ஒரு இடம் முன்னேறினார். மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய தொடரில் 58, 31 ரன் எடுத்ததால் இந்த முன்னேற்றம் கிடைத்தது.
தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட் (782) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பெத் மூனே (749), அலிசா (744), ஆஷ்லே (724), அடுத்த 3 இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (652) 4 இடம் முன்னேறி, 9வது இடம் பிடித்தார். ஜெமிமா (635) 3 இடம் பின்தங்கி, 12வது இடத்தில் உள்ளார்.
பவுலர் தரவரிசையில் 5வது இடத்தில் இருந்த இந்தியாவின் தீப்தி (614) 10 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் அலானா கிங் (775) முதலிடம் பிடித்தார்.
மேலும்
-
அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை: சிவில் வழக்கில் வழிகாட்டுதல் வழங்க உத்தரவு
-
மாணவியரிடம் சீண்டல்; ஆசிரியருக்கு 'போக்சோ'
-
அதிகாரியை கார் ஏற்றி கொன்ற 3 மாணவர்களுக்கு 'குண்டாஸ்'
-
செஞ்சி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து சென்னை வழக்கறிஞர் உட்பட 4 பேர் பலி
-
போதை மாத்திரைகள் பறிமுதல்
-
வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை