மனையின் அங்கீகார நிலையை ஆராயாமல் வீடு வாங்காதீர்!
வீ டு, மனை வாங்கும் போது ஆவண ரீதியாக பார்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தினாலும், மக்கள் இதில் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை. வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து ஒரு சொத்தை வாங்கும் போது அது உண்மையிலேயே முறையாக உள்ளதா, சட்ட ரீதியாக பிரச்னை எதுவும் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனைக்கு உயர் நீதிமன்ற கிடுக்கிப்பிடியால் அரசு தடை விதித்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அனைத்து புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கு முறையாக நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரம் பெறப்படுவது ஒரு நல்ல முன்னேற்றமாக அமைந்துள்ளது.
காலி மனை வாங்கும் போது தான் அதன் அங்கீகாரம் தொடர்பான விஷயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். வீடு இருக்கும் நிலையில் அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டாம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், தனி வீடு, அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போதும் அது அமைந்துள்ள மனை முறையாக அங்கீகாரம் பெற்றதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.
முறைாக அங்கீகாரம் போன்ற விஷயங்கள் சரியாக இருந்தால் தான் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் கட்டட அனுமதி வழங்கும் என்ற அடிப்படை எண்ணத்தால் மக்கள் இதில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக சில கூடுதல் விளக்கங்கள், வல்லுநர்கள் அளிக்கும் கருத்துகள் அடிப்படையில் சில திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துவிடுகிறது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., போன்ற அமைப்புகள் நிலத்தில் காணப்படும் வில்லங்கத்தை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அரசு வழக்கறிஞர் அளிக்கும் லீகல் ஒப்பீனியன் அடிப்படையில் பெரும்பாலான திட்டங்களுக்கு எளிதாக ஒப்புதல் கிடைத்துவிடுகிறது.
முறையான அங்கீகாரம் இல்லாவிட்டால் அங்கு வீடு கட்ட அனுமதி கொடுத்திருப்பார்களா என்ற கேள்வியை தாங்களாகவே நினைத்து கொண்டு பலரும் அமைதியாகிவிடுகின்றனர். ஆனால், பல இடங்களில், 2016க்கு முன் அங்கீகாரமின்றி விற்கப்பட்ட மனைகளில் முறையான அனுமதி இன்றி வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
சொத்தை வாங்குவதற்காக பார்க்கும் போது, அதன் பத்திரங்களுக்கு அப்பால், மனைப்பிரிவு வரைபடம், அதில் அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான சம்பந்தப்பட்ட துறையின் முத்திரை உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.
இதில் அந்த வரைபடத்தின் உண்மை தன்மையை சம்பந்தப்பட்ட துறை அலுவலரை அணுகி சரி பார்த்து கொள்வது கூடுதல் நன்மையை தரும்.
முதலில், மனைப்பிரிவு, மனை வரைபடத்தை ஆராய்ந்த பின், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கான வரைபடம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். இதில் கட்டட வரைபடத்தில் உள்ள கோப்பு எண்ணும் அனுமதி கடிதத்தில் உள்ள கோப்பு எண், சர்வே எண் விபரங்கள் ஒத்துபோகிறதா என்று பாருங்கள்.
இத்துடன், அதில் வரைபடத்தில் உள்ளபடியே வீடு கட்டப்பட்டுள்ளதா அல்லது விதிமீறல்கள் எதுவும் உள்ளதா என்று பாருங்கள்.
சில இடங்களில் வரைபடம் சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் கட்டடத்தில் விதிகளை மீறி கூடுதல் பாகங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவரும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுநர்கள்.
சொத்து வாங்கும் போது, அதன் பத்திரங்களுக்கு அப்பால், மனைப்பிரிவு வரைபடம், அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான சம்பந்தப்பட்ட துறையின் முத்திரை உள்ளிட்ட விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்
மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி