இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
டாக்கா; எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் நுகர்வோர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளை மெல்ல, மெல்ல அசைத்து பார்க்க ஆரம்பித்து இருக்கும் இந்த போரால் வங்கதேசத்தில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு புதிய கட்டுப்பாடுகளை வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது,
மேலும் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு பெட்ரோல், டீசல் தரப்படும் என்று அளவுகோலையும் நிர்ணயித்து அறிவிப்பும் வெளியிட்டு உள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 2 லிட்டர் எரிபொருள், தனியார் கார்களுக்கு 10 லிட்டர், எஸ்யூவி வகை கார்கள், ஜீப்கள், மினி பஸ்கள் ஆகியவற்றிற்கு 20 முதல் 25 லிட்டர் எரிபொருள் வினியோகிக்கப்படும்.
பிக்அப் வேன்கள், உள்ளூர் பஸ்களுக்கு 70 லிட்டர் முதல் 80 லிட்டர் வரையும், தொலைதூரம் செல்லும் லாரிகள், டிரக்குகள் போன்றவற்றிற்கு 200 லிட்டர் முதல் 220 லிட்டர் வரையும் எரிபொருள் தரப்படும்.
நெருக்கடியான இதுபோன்ற காலகட்டத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்படாது, மேலும் இந்த நெருக்கடியை மையப்படுத்தியோ அல்லது காரணமாக வைத்தோ எரிபொருளை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்றும் வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து (5)
Ramaraj P - ,
07 மார்,2026 - 18:48 Report Abuse
இரண்டு நாட்கள் மட்டும் 0
0
Reply
சந்திரன் - ,
07 மார்,2026 - 16:41 Report Abuse
மோடியை குறை சொல்பவர்கள் வங்கதேசம் சென்று செட்டில் ஆவது மிக நல்லது 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
07 மார்,2026 - 16:37 Report Abuse
தற்குறி காங்கிரஸ் திமுக இதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள். 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
07 மார்,2026 - 16:26 Report Abuse
இந்த தற்குறி தலைவர்களை கொண்ட தேசங்களை எல்லாம் பார்க்கும் போது நம் பாரத பிரதமரான மகாத்மா மோடியை நினைத்தால் நெஞ்சம் இனிக்கிறது. எல்லா திருட்டு த்ரவிஷன்களும், குடும்ப கட்சிகளும், இத்தாலிய கும்பலையும் மீறி நம் தேசம் பீடு நடை போடுகிறதென்றால் அதற்கு முழு முதல் காரணம் பாஜக அரசுதான். 0
0
Reply
சுந்தர் - ,
07 மார்,2026 - 16:11 Report Abuse
இங்க இருக்கறவங்க நல்லாத் தெரிஞ்சுக்குங்க... அரசாங்கம் நடத்துவது ஈசி இல்ல... அதுவும் நம்ம நாட்டுல. 0
0
Reply
மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி
Advertisement
Advertisement