இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
சென்னை: ஒரே நேரத்தில் இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, அதிவேகமாகச் சென்ற திமுக கொடி கட்டிய கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி நெஞ்சை கனக்கச் செய்கிறது. திமுக குண்டர்களின் அட்டூழியத்திற்கு ஒரே நேரத்தில் இரு உயிர்களைப் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
“திமுககாரன்” என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்யும் அராஜகங்கள் அளவின்றி தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி பெரும் ஆபத்தானதும் கூட. ஆட்சி முடிய இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில், அதிகார மமதையில் திமுகவினர் இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்குவார்களோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் தமிழக மக்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தனை அகலமான தார் சாலையில், ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்களின் மீது காரை மோதுமளவிற்குத் திமுகவினருக்குத் துணிச்சலும் அலட்சியமும் மிகுந்துள்ளது அருவருப்பானது. பல கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணையும், இன்னும் ஒருசில நாட்களில் பூமியின் ஸ்பரிசத்தை உணரவிருந்த இளம் சிசுவையும் ஒரேநேரத்தில் கருவறுத்துக் காவு வாங்கிய திமுகவினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் யாருக்கு எதனை தொகுதி எப்போது முடிவாகும்
தமிழக மக்கள் திருந்தவேண்டும். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக குண்டர்களின் ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். ஆனால் இந்த திமுக ரவுடிகளை சும்மா விடக்கூடாது. இந்த திமுக ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கவேண்டும்.
நைநா, விஜய் கோட்டத்தில் 41 பேர் அவுட், அதுகுப்பினும் அவர் போகும் கூட்டத்துக்கும் இறப்பு அதையும் பேசுங்க சார். குற்றம் பாரபட்சம் இல்லாமல் இருக்கனும்.
இதுல என்ன போட்டியா எவன் அதிகம் கொலை செய்யறதுனனு. இந்த நொட்ட பேச்சு தான்.மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி