கிக் பாக்சிங் 59 தமிழக வீராங்கனையர் பங்கேற்பு

சென்னை: தேசிய அளவிலான 'கிக் பாக்சிங்' போட்டியில், தமிழகத்தில் இருந்து, 59 பெண்கள் களமிறங்கி உள்ளனர்.

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தென் மண்டல லீக் போட்டிகள், பெங்களூரில் நேற்று துவங்கி, 8ம் தேதி வரை நடக்கின்றன. இதில், தென் மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 59 பெண்கள் தமிழக அணிக்காக களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கேற்பதற்காக, நேற்று அதிகாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து வீராங்கனையர் புறப்பட்டனர்.

'போட்டியில் சிறப்பாக விளையாடி, சாதனை படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம்' என, வீராங்கனையர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement