கல்லுாரி விளையாட்டு விழா

திருப்புத்துார்: திருப்புத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் சசிகுமார் வரவேற்றார்.

கல்வி குழும தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நெடுமரம் ஊராட்சி தலைவர் மாணிக்கவாசகம் சிறப்பு வகித்தார். மாணவர்களின் அணி வகுப்பும், விளையாட்டு போட்டிகளும் நடந்தது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பச்சை வண்ணக்குழு பெற்று கேடயம் பெற்றது. 2ம் இடத்தை நீல வண்ண குழுவும் பெற்றது. தனி நபர் கேடயத்தை மாணவர் தனுஸ், மாணவியர் நித்தியபூரணி பெற்றனர். பேராசிரியர் கண்ணன் அறிக்கை வாசித்தார். மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement