வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்

நாமக்கல்:வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று இரண்டாம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 220 பேரை போலீசார் கைது செய்தனர்.


வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கடந்த, 24 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதில் 234 பேரை போலீசார் கைது செய்து விடுவித்-தனர்.


இந்நிலையில், நேற்று நடந்த மறியல் போராட்டத்திற்கு கூட்ட-மைப்பு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவைத் துறையில் பணிபு-ரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்-டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.


டாப்ஸ்' திட்டத்தில், கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர். தொடர்ந்து நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 84 பெண்கள் உள்-பட, 220 பேரை போலீசார் கைது செய்து மதியம் விடுவித்தனர்.

Advertisement