சிறுமியிடம் சீண்டிய முதியவருக்கு வலை

திருப்பத்துார் : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்துாரை அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, 60; திருப்பத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, வாய் பேச முடியாத, 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி கூச்சலிட்டு தப்பியோடி, பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, சின்னதம்பியை தேடி வருகின்றனர்.

Advertisement