ஜிப்சம் பயன்படுத்தி பூச்சு வேலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பொதுவாக கட்டடத்தில் அடிப்படை பாகங்களை தரமாக கட்டினால் போதும் அனைத்தும் முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால், கட்டடத்தில் பூச்சு வேலை செய்வதில் உரிய நேரம் ஒதுக்குவதுடன் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பெரும்பாலான மக்கள் கட்டடத்தில் பூச்சு வேலைக்கு சலித்த ஆற்று மணல், சிமென்ட் கலவையை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் ஆற்று மணல் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு நிலவும் காரணத்தால், பூச்சு வேலைக்காக விற்கப்படும் பி சாண்ட் பயன்படுத்தப்படுகிறது.
இதிலும் திருப்தி ஏற்படாத நிலையில் மக்கள் ஜிப்சம் கலவையை பயன்படுத்த முன்வருகின்றனர். வழக்கமான ஆற்று மணல், பி.சாண்ட் ஆகிய வற்றுக்கு மாற்றாக ஜிப்சம் கலவையை பூச்சு வேலைக்கு பயன்படுத்தும் போது சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பூச்சு வேலைக்கு ஆற்று மணல், பி.சாண்ட் பயன்படுத்தும் நிலையிலேயே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விகிதங்களில் பொருட்களை சேர்ப்பது, கலவை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில் ஆற்று மணலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கலவையை பூச்சு வேலைக்கு பயன்படுத்தும் போது இருக்க வேண்டிய தடிமன், பி.சாண்ட் கலவையை பயன்படுத்தும் போது மாறுபடும். இந்த வேறுபாட்டை புரிந்து கொள்வதுடன் நீராற்றும் வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதே அடிப்படையில் ஜிப்சம் பவுடரை பயன்படுத்தி பூச்சு வேலை மேற்கொள்ளும் நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கமான ஆற்று மணல், பி.சாண்ட் கலவை தயாரிப்பது போன்று இல்லாமல், ஜிப்சம் பவுடரை பயன்படுத்தி பூச்சு வேலைக்கான கலவை தயாரிக்கும் முறை வேறுபட்டதாக அமைந்துள்ளது.
ஆற்று மணல், பி.சாண்ட் ஆகியவற்றுக்கு மாற்றாக ஜிப்சம் பவுடர் அறிமுமாகி உள்ள நிலையில், இதை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக, சுவர்களில் பூச்சு வேலை மேற்கொள்ளும் போது, அதன் தடிமன், 10 முதல், 12 மி.மீ., தடிமன் அளவுக்கு இருக்கிறது.
நன்றாக கலவையை பயன்படுத்தி தடிமனாக பூச்சு வேலை செய்தால் தான் கட்டடம் உறுதியாகும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், ஜிப்சம் பவுடரை பயன்படுத்தும் போது பூச்சு கலவையின் தடிமன் மிக குறைவாக இருந்தால் போதும்.
இதில் சிலர் தேவையின்றி சிமென்ட், பி.சாண்ட் போன்ற பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதால், பூச்சு உதிரும் நிலை ஏற்படுகிறது. கேல்சியம் சல்பேட் அடிப்படையில் செயல்படும் ஜிப்சம் பவுடரின் அறிவியல் பூர்வ செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
யிண்ட்
நன்றாக கலவையை பயன்படுத்தி தடிமனாக பூச்சு வேலை செய்தால் தான் கட்டடம் உறுதியாகும் என்று மக்கள் நினைக்கின்றனர், இதனால் சுவரில் தேவையில்லாமல் சுமை அதிகரிக்கும்.
மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்