பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி
மாமல்லபுரம்; 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500, வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள், பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தவெகவின் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவரும், நடிகருகமான விஜய் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் விவரம் வருமாறு;
• பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெக அடிப்படை நிலைப்பாடு. அதற்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும். அந்த இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.
• 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.
• அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
• அண்ணன் சீர் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தங்கைகளின் திருமணத்திற்காக ஒரு சவரன் தங்கமும், தரமான பட்டுசேலையும் தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீர் ஆக அளிக்கப்படும்
• பொது போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பு பட்டன்கள் அமைக்கப்படும்.
• பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.
• ரேஷன் கடைகளில், பள்ளிகளில் விலையில்லா நாப்கின் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு விஜய் தமது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
வொர்த் இல்லை
தன் மீது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாக ரத்து வழக்கு பற்றி விஜய் ஏதாவது பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். முந்தைய கூட்டத்தில் அது பற்றி பேசாமல் மவுனமாக கடந்து சென்ற விஜய், இன்று அது பற்றி பேசினார்.
''தொண்டர்கள் வருத்தப்படும் அளவுக்கு விவாக ரத்து வழக்கு ஒன்றும் வொர்த் இல்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்று கூறினார் விஜய்.
சினிமா தயாரிப்பாளர் வீட்டு திருமணத்துக்கு, நடிகை திரிஷாவுடன் ஜோடியாக விஜய் சென்றது, கேலி, கிண்டல் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இவ்வாறு அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புக்கோர் அண்ணன் வந்துட்டாரு.
அவ்ளோ பணத்துக்கு எங்கேடா போவீங்க? பாஞ்சி லட்சத்த விட பெரிய புருடாவா இருக்கே.
நாங்கள் சம்பாதித்து வரி காட்டுவோம். நீங்க ஆட்சி பிடிப்பதற்கு இலவசம் வழங்குவது கேவலமா செயல். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஏழை மக்களுக்கு என ஆரம்பித்த இலவசங்கள் இன்று நீங்கள் சுக வாழ்வு வாழ வாக்குறுதியாக கூறுவது கேவலமா இருக்கு. மக்களை முட்டாளாக நினைக்காதீர்கள்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கலையை திராவிட கட்சிகள் நன்கு செய்ததால், அவர்களால் எளிதாக கோடிகளை குவிக்க முடிந்தது. இதனால் அரசும் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு கடனாளி ஆகி நிற்கிறது. விஜய் ஆட்சிக்கு வந்தால், அரசின் கடன் இருபது லட்சம் கோடியாக நிச்சயம் உயரும். எப்படியோ தமிழக அரசு திவாலாகாமல் இருந்தால் சரியே
சும்மா அடிச்சு உடு வரப்போவது இல்ல
என்னமோ இப்பவே முதலமைச்சர் ஆகிவிட்ட மாதிரி ' அந்த இலாகா ' என் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் என்று அடிச்சு விடறியே?
இந்த மாநிலத்தின் நிதி நிலை என்ன என்று தெரியுமா? நீ அள்ளி விடும் வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற முடியுமா என்று யோசித்தாயா? எவனோ எழுதித் தந்ததை மனப்பாடம் செய்து வாசிக்கத்தான் உனக்குத் தெரியும்.
ஆக சின்ன தா போட்டு பெருசா பிடிக்கிறது
விஜய் உங்கள் திட்டம் அனைத்தும் அருமையாக இருந்தது
பொண்டாட்டிய வெறுப்பேத்த ஜோடி போட்டு காரில் வந்திறங்கிய திட்டமா?
அப்படியே கணவனால் கை விடப்பட்ட பெண்களுக்கு என்ன கொடுப்பான்
நடிகையின் பெயரில் எந்த திட்டமும் இல்லையா?
ஒரு பெண்ணின் தாலியை அறுத்து விட்டு.... பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கெடுக்கிறானாம்.... இதிலே பெண்களை கவனிக்க தனி துறை.... என்னப்பா கலர் கலரா ரீல் விடுற ?மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமெரிக்கா, இஸ்ரேல் கடும் தாக்குதல்களால் ஈரான் பணிந்துவிட்டது; டிரம்ப் அறிவிப்பு